தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீசை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 2 பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டபோது அதில், வாசனை திரவியங்கள், அலங்கார பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீஸ் என்ற பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த உமர் மகன் சதாம் உசேன் (30), நெல்லையைச் சேர்ந்த சங்கரன் மகன் பிரபாகரன் (34), தூத்துக்குடி மீனாட்சி புரத்தைச் சேர்ந்த கோட்டாலமுத்து மகன் பெரியசாமி (55) ஆகிய 3பேரை கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வந்த ரூ.23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஆம்பர்கிரீஸ் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை இலங்கை்கு கடத்திச் செல்ல திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

