
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு செந்தில் ராஜ் அவர்கள் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார்.
இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற 75 வது ???????? சுதந்திர தின விழா அணிவகுப்பில் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் பலருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.*
இந்த நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக மூத்த பணியாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு செந்தில் ராஜ் அவர்கள் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார். இவர் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகளை உடனுக்குடன் பொதுமக்களிடம் எடுத்துச் சென்று கொரோனா நோய் தொற்று அதிகம் பரவிய காலத்தில் மகத்தான மக்கள் பணி ஆற்றினார். கிராமங்கள் தோறும் அரசின் கொரோனா விழிப்புணர்வு தகவல்களை புகைப்படம் மற்றும் மின்னணு சாதனம் மூலம் எளிய பாமர மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் மூத்த பணியாளர் ராமசந்திரனின் மனித நேய பணிக்கு நமது போலீஸ் செய்தி டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
செய்தி தொகுப்பு. எம். ஆத்தி முத்து

