தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக் குமு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் 10 பேரும், திமுக உறுப்பினர்கள் 5பேரும் பங்கேற்றனர். இதில் பேஞ்சாயத்து பகுதிகளில் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தில் வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் செலவில் சாலைகள் மமைத்தல் புதிய தீர்மாங்கள் முன்வைக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு திமுக, கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் தோல்வியை தழுவின. மாவட்ட கவுன்சிலர்களிடம் எந்தவித ஆலோசனையும் இன்றி தலைவரே தன்னிச்சையாக தீர்மானங்கான கொண்டு வந்ததால், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டன என்று மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

