தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 4 நபர்கள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை. மேலும் சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள், லாரி மற்றும் கார் பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் விட்டால்நாயக்கன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி மற்றும் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது இதையடுத்து 4 நபர்களை கைது செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சுமார் 1000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் லாரி மற்றும் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

