தூத்துக்குடி புதிய டவுண் டிஎஸ்பி-யாக கணேஷ் அவர்கள் பொறுப்பேற்பு
தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் பிரகாஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பணியாற்றினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அளவில் 34 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் தூத்துக்குடி டவுண் டிஎஸ்பியாக இருந்த பிரகாஷ் திண்டுக்கல் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே பணியாற்றி வந்த தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பணிமாறுதல் செய்யப்பட்ட காரணத்தினால், அந்த இடத்திற்கு நெல்லையில் இருந்து டிஎஸ்பி கணேஷ் நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி டவுண் புதிய டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்ட கணேஷிடம் முந்தைய டிஎஸ்பி பிரகாஷ் காலை பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற கணேஷ் அவர்களை தூத்துக்குடி டவுன் பகுதியில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளான தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், வடபாகம் ஆய்வாளர் அருள், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தெர்மல் நகர் ஆய்வாளர் கோகிலா,சிப்காட் ஆய்வாளர்
சுப்பிரமணியன், மாநகர போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மத்திய பாகம் உதவி ஆய்வாளர் சங்கர், தென்பாகம் உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, காந்திமதி,வடபாகம் உதவி ஆய்வாளர் சுந்தரம், தாளமுத்து நகர் உதவி ஆய்வாளர் சார்லஸ், ஆகியோர் நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற கணேஷ் அவர்கள் இன்று மாலை டவுண் பகுதியில் குறிப்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி பஜார் மற்றும் கடற்கரை சாலைகள் உட்பட பல முக்கிய பகுதிகளில் திடிரென விசிட் செய்தார் முதல் நாள் தூத்துக்குடி டவுண் பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் டிஎஸ்.பி. விசிட் மேற்கொண்டதால் தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள போலீஸ்சார்கள் அலார்ட் ஆக இருந்தனர்.இன்று 8 மணிக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் ரோந்து வந்து சரியாக 8 மணிக்கு கடை அடைத்து
விடுங்கள் என சொல்லி ரோந்து மேற்கொண்டனர். இன்று தூத்துக்குடி டவுண் பகுதியில் குறிப்பாக தென்பாகம், மத்திய பாகம் காவல் நிலைய எல்கையில் அரசு தெரிவித்த நேரத்தில் அணைத்து கடைகளும் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஎஸ்பி கணேஷ் அவர்கள் டவுன் பகுதிகள் உள்ள அணைத்து காவல் நிலைய எல்கை குறித்து அனைத்தும் அறிந்து வீட்டு மேலும் அதிரடி விசிட் களில் ஈடுபடுவார் என்றும் தெரிய வருகிறது
செய்தி தொகுப்பு
எம். ஆத்தி முத்து

