நெல்லை: புகழ் பெற்ற நெல்லை பிரபல இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்வெளியாகியுள்ளது
நெல்லை டவுனில் உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்கள் வசித்து வரும் டவுன் அம்மன் சன்னதி தெருவில் தீவிர துப்புரவு பணி இன்று மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
நெல்லை உலக புகழ் பெற்ற இருட்டு கடை அல்வா கடை உரிமையாளர் மற்றும் அவர் மருமகனுக்கு (விசாகம் sweets) கொரனா நோய் தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுகாதார ஆணையாளர் உத்தரவுபடி கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது தமிழகம் அளவில் புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் திடீர் மரணம் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு கொம்பன்ராஜ்
