தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் க்கு பிரிவு உபசார விழா ;கோவில்பட்டி டிஎஸ்பி கலை கதிரவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.
தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் க்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் நேற்று கோவில்பட்டி டிஎஸ்பி கலை கதிரவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.
தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி யாக பிரகாஷ் அவர்களை கடந்த 08/06/2018 அன்று DGP நியமித்தார். 2 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய இவர் தூத்துக்குடியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார், ரௌடிகளின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். காவலர்களின் நலனில் தனிஅக்கறைகொண்டவர், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்ற பெருமையை பெற்றவர் . ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 22/05/2018 நடந்த போராட்டத்தில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது இந்த நேரத்தில் தூத்துக்குடியில் பணியாற்றிய அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றம்
செய்யப்பட்டனர் அந்த சமயத்தில் தூத்துக்குடியை இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்பதால் ஒரு அதிரடி அதிகாரி நியமிக்க வேண்டும் என அரசு.முடிவு செய்து கடந்த 08/06/2018 அன்று தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி யாக பிரகாஷ் அவர்களை அரசு நியமித்தது
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பி யாக பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து மாலை 7 மணிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது,. இந்த விழாவில், கலந்துகொண்ட கோவில்பட்டி டிஎஸ்பி கலை கதிரவன் அவர்கள் டிஎஸ்பி பிரகாஷ் அவர்கள் பணிக்காலத்தில் செய்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பட்டியல் இட்டார் பின்னர் தூத்துக்குடியில் இவருடன் இணைத்து பணியாற்றிய பல விஷயங்களை பகிர்ந்துகொண்டு பின்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார், டிஎஸ்பி கலை கதிரவன் அவர்கள். இந்த பிரிவு உபசார விழாவில் தூத்துக்குடி டவுன் பகுதியில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளான தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், வடபாகம் ஆய்வாளர் அருள், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தெர்மல் நகர் ஆய்வாளர் கோகிலா,சிப்காட் ஆய்வாளர் சுப்பிரமணியன், மாநகர போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மத்திய பாகம் உதவி ஆய்வாளர் சங்கர், தென்பாகம் உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, காந்திமதி,வடபாகம் உதவி ஆய்வாளர் சுந்தரம், தாளமுத்து நகர் உதவி ஆய்வாளர் சார்லஸ், டிஎஸ்பி ஆபிஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், கன் மேன் முத்துசாமி ,குணசிங்,மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு டிஎஸ்பி பிரகாஷ் அவர்களை வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியின் முடிவில் டிஎஸ்பி பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.. தூத்துக்குடியில் 2 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக மக்கள் பணியில் ஈடுபட்ட டிஎஸ்பி பிரகாஷ் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் டிஎஸ்பி யாக மேலும் பல சரித்திர சாதனைகள் படைக்க போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம் செய்தி தொகுப்பு
எம்.ஆத்திமுத்து

