தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பாரதி நகரைச் சேர்ந்தர் சர்க்கரைசாமி மகன் முனியசாமி (55), இவர் நேற்று புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள டாஸ்மாக் அருகே பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் அவரது பைக்கை திருட முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த முனியசாமி மற்றும் அப்பகுதி மக்கள் அவர்களை விரட்டிச் சென்றதில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர்.
மற்றொருவர் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து பிடிபட்ட நபரை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் தூத்துக்குடி மறவன்மடம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மணி மகன் பாலமுருகன் (23) எனத் தெரியவந்தது. பைக் திருடியதாக வழக்குப் பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நடுக்கூட்டுடன் காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணப்பெருமாள் மகன் நாகராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

