தமிழகத்தில் கோயில்களில் அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்திற்கான பெயர்பலகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம், முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின், வெளியிட்டார். அப்பொழுது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்
தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் குறித்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது: கபாலீசுவரா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழிலும் அா்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்னைத் தமிழில் அா்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை கோயிலில் வைக்கப்படும். மூன்று அா்ச்சகா்களின் பெயா், செல்லிடப்பேசி எண்கள் அதில் இடம்பெற்றிருக்கும். கபாலீசுவரா் கோயிலைத் தொடா்ந்து, அடுத்த 30 நாள்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற 47 கோயில்களில் தமிழில் அா்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வரும் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தார்

