ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையாக கருதப்படும் சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பொதுமக்களின் கோரிக்கையை இந்த ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரையும் அரவணைத்து அவர்கள் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார் திருவாடனை ஒன்றிய சேர்மன்
ப.முகம்மது முக்தார் திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட 8வது வார்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீனவர் குடியிருப்பு உள்ளது இங்கு சாலை மிகவும் மோசமாகஉள்ளது என்று இளைஞர் சங்கத்தினர் திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று இதனை சரிசெய்ய அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதை தாயுள்ளத்தோடு பரிசீலித்து உடனடியாக அந்தசாலையை பேவர்பிளாக் சாலையாக சேர்மன் நிதியிலிருந்து சுமார் 225மீட்டர் பேவர்பிளாக் ரோடு 8லட்சம்நிதி ஒதுக்கீடு செய்து தந்து சாலைபணியை துவக்கிவைத்தார்கள் இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒன்றிய சேர்மன் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றி வரும் அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது
சாலை அமைக்கும் பணியை சேர்மன் நேற்று எஸ்பி பட்டணம் பகுதியில் பார்வையிட்டார் அவருடன் எஸ்பி பட்டணம் ஊராட்சிதலைவர் சுலைஹாபீவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர்சாதிக் 9வதுவார்டு உறுப்பினர் முகம்மதுநூர்தீன் ரபீக் அஸ்கர் அயூப்
அப்துல்பாக்கி பாரூக்அலி ஒப்பந்தததாரர் ராஜாராம் மற்றும் இளைஞர்சங்கத்தினர் உடன் இருந்தனர்
செய்தி தொகுப்பு சகுபர்சாதிக்

