விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டும் உருவாக்கப்பட்டிருந்தது.
விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” அவர்களை கோவில் கொடை விழாக்களில் பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக கடந்த 31.07.2021 எட்டயபுரம் காவல்நிலைய எல்லையில் உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மூவேந்தர் கபாடிகுழு மற்றும் ஒருகூட்டு பறவைகள் கபாடி குழு நடத்திய மாபெரும் கபாடி போட்டியில் விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM”” பங்கேற்று சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்றுள்ளார்கள்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்கள் .
செய்தி: எம் ஆத்திமுத்து

