• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

policeseithitv by policeseithitv
August 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை  பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசிப்பை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி நாசரேத் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (01.08.2021) நாசரேத் புன்னை நகர் வனதிருப்பதி கோவில் அருகே வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் கொரோனா 3ம் அலை பரவத் தொடங்கியுள்ளது, அதனால் நம் மாநிலத்திலும் பரவக்கூடும் என்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரைக்கும் 7 நாட்கள் பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று காலை தூத்துக்குடி நகரத்தில் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை சார்பாக நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இவை அனைத்தையும் நாம் கடைபிடித்து நாமே நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் தமிழன்டா கலைக்கூடம் மாநில செயலாளர் கதிர்வேல், மாநில பொருளாளர் பிரம்மராஜ், ஜேசுதாசன் நட்ராஜ், கலைக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் வனதிருப்பதி ஆலய மேலாளர் வசந்தன், நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராய்ஸ்டன்,. தங்கேஸ்வரன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Previous Post

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது

Next Post

விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்று சாதனை – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

Next Post
விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்று சாதனை – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

விளாத்திகுளம் "POLICE KABADI TEAM"" சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்று சாதனை - விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In