• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது

policeseithitv by policeseithitv
August 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள்  கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை – 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் நிலைய எல்லைக்குட்பட்ட மதூர் கிராமம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகம் த/பெ.பொன்னுசாமி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மதூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்த ஒப்பந்த பணியெடுப்பதில் சண்முகத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்து மற்றும் இந்துசேகர் ஆகியோர்களுக்குமிடையே தொழிற்போட்டி இருந்து வந்த நிலையில், கடந்த 30.07.2021 அன்று இரவு சண்முகம் மதூரிலிருந்து வாலாஜாபாத்திற்கு அவரது இருசக்கர வாகனத்தில் மாத்தூர் சந்திப்பு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி, தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் விரைவாக சென்று பார்வையிட்டதுடன். எதிரிகள் விட்டுச்சென்ற பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு பைப் ஆகிய தடயங்களை சேகரிக்க புலன்விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும், எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 1 ) முத்து [56] த/பெ.தாமோதரன். மதூர், அவரது மகன் 2)நித்தியானந்தம் [24], 3 ) இந்து சேகர் [37], த/பெ.கணேசன், மதூர். அவரது சகோதரர் 4 ) ராஜசேகா, த/பெ.கணேசன், மதூர். 5 ) கண்ணன் த/பெ.தாமோதரன், மதூர் மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு பைப்பால் சண்முகத்தை தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து மேற்படி எதிரிகளில் 1)முத்து , 2)நித்தியானந்தம், 3)இந்து சேகர், 4)ராஜசேகர் மற்றும் 5)கண்ணன் ஆகியோர்களை தனிப்படையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாகவும் மற்றும் விரைவாகவும் செயல்பட்டு கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்த வாலாஜாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாகப் பாராட்டினார். மேலும், எதிரிகள் மீது விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலமாக எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

Previous Post

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி

Next Post

மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Next Post
மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை  பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In