புதுக்கோட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., தலைமையில் நேற்று வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது. அப்பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு பயிற்சி பெறுவது மூலம் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான உணவு பொருட்கள் பற்றியும், காவல்துறையினரின் சந்ததிகளின் எதிர்கால நலன் பற்றியும் எடுத்துரைத்தார். பின்பு அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை குறைநிறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்தார்.
இவ்வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், பொன்னமராவதி, இலுப்பூர் மற்றும் கோட்டைப் பட்டிணம் ஆகிய உட்கோட்டங்களில்
நடைபெற்றது.


