விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் அறிவுரைபடி உட்கோட்டம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்கள் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.*
இன்று விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சென்னையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் திரு.வீரகுமார் அவர்களின் குடும்பத்தினர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.*
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திருமதி.கலா, விளாத்திகுளம் உதவி ஆய்வாளர்கள் திரு.கங்கைநாதபாண்டியன், திரு.காசிலிங்கம், காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


