கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி 12.07.2021 காலை 09.30 மணி முதல் மாலை 17.00 மணிவரை திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாக சமுதாயக்கூடத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த தடுப்பூசி முகாமினை திருச்சி மாநகர காவல் ஆணையர், அருண் இ.கா.ப., துவக்கி வைத்தார் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவர் முகமது ஹக்கீம் மற்றும் 4 மருத்துவ பணியாளர்களுடன் வருகைபுரிந்து அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தினார்
இந்த முகாமில் திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் இந்த தடுப்பூசி முகாம் திருச்சி மாநகர துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு மேற்பார்வையில் சமூக இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தார்

