• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெட்ரோல், டீசல் விலை உயர்வு !! ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் எழுச்சிமிகு கண்டன சைக்கிள் பேரணி பொதுமக்கள் ஆதரவு திரண்டது

policeseithitv by policeseithitv
July 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெட்ரோல், டீசல் விலை  உயர்வு !! ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து  மாபெரும்  எழுச்சிமிகு கண்டன சைக்கிள் பேரணி பொதுமக்கள் ஆதரவு திரண்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலத்தில் எரிபொருள் விலை உயர்வு சாமானியரை கடுமையாக பாதித்துள்ளது என்றும் இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது
அந்த அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணி தமிழக அளவில் மிகப்பிரம்மாண்டமான பேரணியாக நடைபெற்று தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் மாபெரும் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் பள்ளி அருகில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஊர்வசிஅமிர்தராஜ் பேரணியில் சைக்கிள் ஓட்டியபடி கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் .
பேரணியில் பங்கேற்ற ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பேரணி முடியும் வரை காங்கிரஸ் தொண்டர்களுடன் பொதுமக்களுக்கு கை அசைத்தபடி வலம் வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சைக்கிள் பேரணி மேடை பிள்ளையார் கோயில், பழைய தாலுகா அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் புதிய பாலம், புதுக்குடி சென்று அங்கிருந்து பழைய பாலம் வழியாக நகருக்குள் வந்து பஸ் நிலையம், பெருமாள் கோவில், கே.டி.சி டெப்போ வழியாக வ.உ.சி திடலை வந்து அடைந்தது. அதனைத்தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. இதில், பெண்கள் காலி சிலிண்டருடன் வந்து பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.,வுமான ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது, ”மக்களை பழிவாங்கும் போக்கில் செயல்பட்டு வரும் பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்பபெறும் வரை எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலத்தில் எரிபொருள் விலை உயர்வு சாமானியரை கடுமையாக பாதித்துள்ளது எனவும் குற்றம் சாட்டினார் எரிபொருள் விலை உயர்ந்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கலால் வரி மூலம் ரூ.20 லட்சம் கோடி வருவாய் கிடைத்தும் பாஜக அரசு சுமையை ஏற்றுகிறது என்றும் எம்எல்ஏ அமிர்தராஜ் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97 ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், 25 காசுகள் அதிகரித்து, 97 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து, 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை நாட்டின் சில பகுதிகளில் ஏற்கெனவே 100 ரூபாயை தாண்டிவிட்ட நிலையில் தமிழகத்திலும் அந்நிலையை எட்ட இருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தப் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியில் காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் சீனிராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட பொதுசெயலாளர்கள் அலங்காரபாண்டியன், சிவகளைபிச்சையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், வட்டார செயலாளர்கள் ஸ்ரீவை நல்லக்கண்ணு, கோதண்டராமன், புங்கன், தாசன், சொரிமுத்துபிரதாபன், லூர்துமணி, மதிசேகரன், நகர தலைவர் சித்திரை, வட்டார தலைவர் முத்துபாண்டி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பிச்சைக்கண்ணு, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், கிராம கமிட்டி தலைவர்கள் சந்திரன், நவாஸ், ஜெயராமன், கார்த்திக், சுடலை, ராஜதுரை, மகளிரணி பஞ்சவர்னம் உள்பட பலர் கலந்துகொண்டனர். செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

Previous Post

போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்‌‌‌தும்‌‌‌ முகாமை போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்

Next Post

அம்மன் கழுத்தில் கிடந்த 10½ பவுன் நகை கொள்ளை கோவில் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

Next Post
நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

அம்மன் கழுத்தில் கிடந்த 10½ பவுன் நகை கொள்ளை கோவில் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In