கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருவதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது.இதனால் அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.

இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்கள்
அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் தொடர்ந்து உணவு பொருள்கள், காய்கறி அரிசி ஆகியவை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படை யில் இந்த பேரிடர் காலங்களில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் உள்ள உள்ள அணைத்து தரப்பு ஏழை, எளிய மக்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்கி உதவிடும்மாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் இ பி எஸ் அவர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ பி எஸ் அவர்கள் ஆணைக்கினங்க நலத்திட்ட நாயகன் என்று போற்றப்படும் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான
சி. த. செல்லப்பாண்டியன் அவர்கள் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை, பொது மக்கள் சுமார 40 ஆயிரம் பேருக்கு அவர்கள் 37 வது நாட்களாக தொடர்ந்து 1 கோடியை 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
37 வது நாட்களாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய துறைமுகம் லேபர் காலனியில் 400 குடும்பங்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த 50 நபர்களுக்கும் கட்டட தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் 50 நபர்களுக்கும் அரிசி பைகளை வழங்கினார். இன்று 37 வது நாட்களாக நிவாரணப்பணிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்கே மாரியப்பன், மேற்கு பகுதி செயலாளர் முருகன், அரசு வழக்கறிஞர்கள் ஆன்ட்ரூமணி, பிள்ளை வினாயகம், ராஜாராம், அம்மா பேரவை மூர்த்தி, அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல இணை செயலாளர் சங்கர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி.த.செ. ராஜாசிங், மாவட்ட பிரதிநிதி சேவியர், தெற்கு பகுதி பொருளாளர் அனல் ராஜசேகர், நிர்வாகிகள் ஹார்பர் பாண்டி, ஜெகதீஸ், சுப்பிரமணியன், டைமன்ராஜ், இசக்கிமுத்து, அருண்குமார், அய்யப்பன், சங்கர், சண்முகராஜ், ஜோதிகா மாரி, நயினார், ஆறுமுக நயினார், வெற்றிச்செல்வன், சத்யா நகர் சுப்புராஜ், பாண்டி, மாரியப்பன், பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம் கௌதம் மற்றும், ஊர்காவலன், கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

