தமிழக மக்களுக்கு மக்கள் பாதுகாப்பு கழகத்தின் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் சென்னையில் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட இடங்களில் கொரானா வைரஸ் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது அரசு ஊரடங்கு பிறப்பித்தது கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் பரவிக்கொண்டிருக்கிறது வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அதிகமாய் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள் இறப்பு சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது இந்த வைரஸ் பற்றி தலை சிறந்த மருத்துவர்களே இந்த வைரஸ் உடைய தன்மையை கண்டுபிடிக்க முடியவில்லை வெப்பம் அதிகமாக இருந்தால் வெயில் தாக்கம் இருந்தால் இந்த கொரானா அழிந்துவிடும் என்றார்கள் ஆனால் இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால்பருவ காலத்தின் சூழ்நிலைக்கேற்ப இந்த வைரஸ் மாறிக்கொண்டே இருக்கும் என்று சொல்கிறார்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்களை அனுமதிப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லை எல்லாம் நிறைந்து காணப்படுகிறது உலக சுகாதார மையம் சொன்ன அறிவுரைகளின் படி முக கவசம் கையுறைகள் கைகளை கால்களை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்கள் மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் இப்படிப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்தாலும் பாதுகாப்பாக இருப்பவர்களுக்கும் கொரானா வைரஸ் தாக்கம் பற்றிக் கொள்கிறது.தமிழக அரசும் சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தொழிலாளர்களும் காவல் பணியாளர்களும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இதற்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட இடங்களில் குறிப்பாக சென்னையில் மக்களுக்கு எவ்வித பயமும் இல்லாதபடி சகஜமான சூழ்நிலையில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் நம்மை தாக்காது நம் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று அலட்சியமாக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.சுகாதாரத்துறை சொன்ன உணவு கட்டுப்பாடுகளை நாம் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம் என்று தைரியமாக இருக்கிறார்கள் இது முற்றிலும் தவறான செயல்பாடு இந்த நோய் நம்மைத் தாக்காத வரை பயம் இல்லை ஆனால் நோய் தொற்று ஏற்பட்டால் சுகப்படுத்த முடியுமாமுடியாதா என்று யாருக்கும் தெரியாது ஏனென்றால் உறுதியாக குணப்படுத்த முடியும் என்கிற மருத்துவ சிகிச்சை முறைகள் இல்லை ஒவ்வொருவரும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்றால் உலக சுகாதார மையம் மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக சுகாதாரத் துறையும் சொல்லும் வழிமுறைகளை விதிமுறைகளை நிச்சயமாக நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களும் மற்றும் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் உயிரை துச்சமாக மதித்து தமிழ்நாட்டு மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடைய இந்தக் கடுமையான உழைப்பிற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் அவருடைய அறிவுறுத்தலின்படி செயல்படுங்கள்
ஒவ்வொரு மனிதனுடைய உயிர்ப் பாதுகாப்புக்காக தான் அரசாங்கம் இவ்வளவு சிரத்தை எடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு மக்களாகிய நம்முடைய ஒத்துழைப்பு நிச்சயம் தேவை நாம் அசாதாரணமாக இருந்துகொண்டே அரசாங்கத்தையும் மற்றவர்களையும் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருப்பவர்களுக்கும் இந்த நோய் தாக்கி இருக்கிறது எப்படி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று ஒரு செய்தி மிக முக்கியமான ஒரு மனிதர் மிகவும் பாதுகாப்பாக இருந்த மனிதர் திடீரென்று காய்ச்சல் என்று சொல்கிறார் மருத்துவமனைக்கு் கொண்டு செல்கிறார்கள் பரிசோதனை செய்கிறார்கள் தோற்று இருக்கிறது என்று தகவல் வருகிறது இதற்காக மருத்துவமனைகளில் அனுமதிக்க செல்கிறார்கள் அரசாங்க மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிறைந்து இருக்கிறது இந்த நோயில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் அனுமதிக்கப்பட முடியவில்லை நீங்கள் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது இதே நிலை அதிகரித்தால் நாளுக்குநாள் மரணத்தின் எண்ணிக்கை அதிகமாகி விடும் இந்த உயிர் என்பது விலைமதிப்பற்றது ஆகவே அன்புள்ள கொண்ட நீங்கள் உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள உங்களை நம்பி இருக்கிற குடும்பங்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வழி நடத்திட உங்கள் உயிர் முக்கியம். நம்முடைய அசாதாரண தைரியத்தில் நம் உயிரை நாமே இறந்துவிட காரணமாகி விடக்கூடாது ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சுகாதாரத் துறையின் மூலமாக அறிவுறுத்தப்படும் அறிவுரைகளை ஏற்று இந்த கொரானா தோற்று சமூகத்தின் இல்லை என்ற சூழ்நிலை வரும் வரை சமூக இடைவெளி விட்டும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தியும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளியில் செல்ல வேண்டாம்வெளியில் செல்லக்கூடிய அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்போடு சென்று வரவும் வந்தவுடன் உங்களை சுகாதாரத்துறை அறிவுரையின்படி சுத்தப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் உங்களை நம்பி உங்கள் மனைவி உங்கள் குழந்தைகள் உங்கள் உறவுகள் இருக்கிறது அனைவருடைய பாதுகாப்பிற்காகவும் உங்களுடைய பாதுகாப்பிற்காகவும் தவறாமல் சுகாதாரத்துறை உடைய அறிவுறுத்தலை செயல்படுத்துங்கள். பணம் இருக்கலாம் பதவி இருக்கலாம் அறிவார்ந்த படிப்பு இருக்கலாம் ஆனால் இந்த வைரஸ் தாக்கப்பட்டால் எந்த ஒரு பயனும் இருக்காது காப்பாற்ற முடியாது. நாம் ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டால் நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளுக்கும் மிகவும் எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.வேலைக்கு செல்லக் கூடியவர்கள் கண்டிப்பாக போய் வர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
உயிர் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். உயிர் இருந்தால் தான் ஓவியம் வரைய முடியும் உயிர் இல்லை என்றால் நாம் காவியமாக மாறி விடுவோம். உங்களுடைய உயிர் உங்கள் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் மிகவும் அவசியம். ஆகவே தமிழக அரசு சொல்லியிருக்கிற அறிவுறுத்தலுக்கும் ஊரடங்கிற்கும் நாம் ஒத்துழைப்பு கொடுப்போம் சமூக அக்கறையோடு இந்த நாட்டை பாதுகாப்போம் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக வேண்டிக் கொள்கிறோம் தமிழக மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக அவர்களுடைய நலனுக்காக இரவு பகல் பாராதுதமிழகத்தின் தந்தையாக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக மிகப்பெரிய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கொரானா வைரஸ் நோயை தமிழகத்தை விட்டு விரட்டி விட இரவு பகல் பாராது சுகாதாரத் துறையை செயல்படுத்தி வழிநடத்திக் கொண்டிருக்கிற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு காவல்துறையினருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் காவல்துறை பணியாளர்களுக்குஅரசு பணியாளர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தமிழக மக்களின் சார்பாகவும் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்

