
சென்னை அசோக்நகர், கே,கே,நகர் போன்ற கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர ஆணையாளர் அ.கா.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் R-11 ராயலா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை நகர், மூவேந்தர் தெருவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை ஆய்வுசெய்தார்கள்.
உடன் தி.நகர் துணை ஆணையர் மற்றும் அசோக் நகர் உதவி ஆணையர் ஆகியோர் இருந்தனர்அதனை தொடர்ந்து
R10. M.G.R. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நோய்த்தொற்று பகுதியான ஜாபர்கான்பேட்டை அய்யாவு தெருவில் ஆய்வு செய்தார்.
பின்னர் R-7 , K.K. நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நோய்த் தொற்று பகுதியான ராணிஅண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தார். மேற்கண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் பாதுகாப்புப்புடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார் கடந்த வாரம் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ஆணையாளர் நேற்று அசோக்நகர், கே,கே,நகர் போன்ற தடைசெய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள்
குறித்து கேட்டறிந்தார் செய்தி தொகுப்பு
எம்.ஆர்.ஜெயபால்

