
கொடைக்கானலில் திமுக சார்பில் மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, வார்டு செயலாளர் இமானுவேல் ஆகியோர் ஏற்பாட்டில் 7 லட்சம் மதிப்பில் 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் பொருள் வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலைஞரின் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கழகத்தின் சார்பில் தலைவர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கினங்க, மாநில துணை பொது செயலாளர் ஐ பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர், கிழக்கு மாவட்ட செயலாளர், செந்தில் அவர்கள் அறிவுரையின் பேரில் திமுக கொடைக்கானல் மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, 6 வது வார்டு செயலாளர் இமானுவேல் இளைஞரணி ஜெயக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில்
அவர்களது சொந்த செலவில் சுமார் 1500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரண பொருள்கள் வழங்க முடிவு செய்து இன்று முதல் கட்டமாக சுமார் 500 நபர்களுக்கு தலா ஒரு நபருக்கு ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் காய்கறிகளை கொடைக்கானலில் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவசமாக இன்று வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் நிலையம் ஆய்வாளர் ராஜ சேகர் ,கொடைக்கானல் நகர திமுக செயலாளர் முகமது இப்ராகிம், மாயக்கண்ணன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் பொது மக்களின் இயல்பு நிலை முற்றிலும் அடியோடு பாதிக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் மனித நேயத்தோடு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக எந்தவிதமான பணிகளும் இன்றி மக்களின் வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ள ,இந்நிலையில் பொதுமக்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள், இவர்கள் அன்றாட உணவிற்கு கூட சிரமப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் திமுக கொடைக்கானல் மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, 6 வது வார்டு செயலாளர் இமானுவேல் இளைஞரணி ஜெயக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில்
நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது மிகவும் உதவியாக உள்ளது என கொடைக்கானல் பொதுமக்கள் தெரிவித்தனர். திமுக வினர் வழங்கிய இந்த நிவாரண பொருள்களை பெற்றுக்கொண்ட கொடைக்கானல் பொதுமக்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும், மாநில துணை பொது செயலாளர் ஐ பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர், கிழக்கு மாவட்ட செயலாளர், செந்தில், திமுக கொடைக்கானல் மீனவர் அணி அமைப்பாளர் சஞ்சீவி, 6 வது வார்டு செயலாளர் இமானுவேல் இளைஞரணி ஜெயக்குமார் ஆகியோரை பொதுமக்கள் மனதார வாழ்த்தினார்கள். நிவாரண பொருள்களை பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு வாங்கி சென்றனர்.
செய்தி தொகுப்பு
கொடைக்கானல் வி ஆனந்த்

