தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4065 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. 10பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்களை காரில் கடத்திய பணிக்க நாடார் குடியிருப்பு மேற்கு தெருவைச் சேர்ந்த தங்கதுரை மகன் மகேஸ்வரன்(38) என்பவரிடமிருந்து 47 கிலோ மதிப்புடைய 3900 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல் தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், முத்தையாபுரம், கோவில்பட்டி மேற்கு, காடல்குடி, எட்டயபுரம் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய 8 காவல் நிலைய போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 10 பேரை கைது செய்தனர். மொத்தம் 4065 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

