தேனி மாவட்டம், பெரியகுளம் கோர்ட், தென்கரை காவல் நிலைய சரகம் தாமரைக் குளத்தில் 06.07.2021 ம் தேதி இரவு அருள்மிகு ஸ்ரீ அழகுமலையான் திருக்கோவிலில் கதவின் பூட்டை உடைத்து கோவிலின் உள்ளே இருந்த பெருமாள் சாமி சிலை மீது அணிந்திருந்த வெள்ளி கிரீடம் ,வெள்ளி கவசம், சங்கு சக்கரம், அபாய ஹஸ்தம் .மற்றும் பெருமாள் தங்க திருநாமம், தங்க திருமாங்கல்யம் ,மைக் செட் ,சிடி பிளேயர்,ஆம்ப்ளிபயர் ஆகிய பொருட்களை திருடிச் சென்றதாக கோவிலின் பூசாரியான தாமரை குலத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..
இந்த திருட்டு சம்பந்தமாக குற்றவாளிகளை பிடிப்பதற்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோ௩்௧ரே பிரவீன் உமேஷ் . உத்தரவின் பெயரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் தென்கரை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் குற்ற தடுப்பு காவலர்கள், ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து புலன் விசாரணை செய்து இதற்கு முந்தைய கோவில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பல௩் குற்றவாளிகளை கண்காணித்து வந்ததில் இந்த வழக்கில் திருடிய நபர்கள் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டது.பெரியகுளம் சேர்ந்த 1 புவனேஸ்வரன், 2 ஜெகதீஸ்வரன், 3 பிரதாப் சிங், 4 பிரகாஷ் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கோவில் சாமி சிலைகள் இருந்து திருடப்பட்ட தங்க அணிகலன்கள் 4 1/4 பவநும் , வெள்ளி அணிகலன்கள்2 3/4 கிலோவும் ,மற்றும் சிடி பிளேயர் ,ஆம்ப்ளிபையர், மைக்செட் .போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை விரைந்து கண்டுபிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டிய தனிப்படை குழுவை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

