மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊடகங்களில் பேசியதுதாவது
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ற அமைப்பு மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் தொடங்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமண முறை ஒழிப்புக்கு காக்கும் கரங்கள் அமைப்பு துவங்க திட்டம்.
பெண்கள் உதவி மையம் பெண்கள் மேம்பாட்டு ஆணையம்,மகளிர் காவல் நிலையம், மகளிர் திட்டம், மனநல மருத்துவ துறை ஆகிய அமைப்பு மூலம் கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
பெண்கள் உதவி மையம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மட்டுமில்லாமல்,குழந்தை திருமண செய்து கொண்ட நபர்களின் வாழ்க்கை முறைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்து கண்காணிக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 451 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

