நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் ஓ எஸ் மணியன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பங்கேற்றார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடுகாவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஏ. சபியுல்லா, நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆர். கிரிதரன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பையன் மற்றும் வேதாரணியம் காவல் ஆய்வாளர் செந்தில் குமரன், வேட்டைக்காரனிருப்பு காவல் ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எஸ். மாணிக்கவாசகம் நாகப்பட்டினம்

