தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருக்கு பணி நிமித்தமாக வழங்கப்பட்ட வாகனம் திடீர் என நிறுத்தப்பட்டதாக தகவல்
பின்னணி என்ன?
கூட்டுறவு துறை அமைச்சர் நேரடியாக விசாரிக்க வேண்டும் என
அதிமுக தொண்டர்கள் குமுறல் !!
———————-
தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவர் திருமதி சங்கரேஸ்வரி
இவர் கூட்டுறவு தேர்தலின் போது வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முன்னாள் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ஆவார். இவரது கணவர் முருகேசன் தற்போது 12வது வார்டு அதிமுக வட்ட கழகச் செயலாளராக இருந்து வருகிறார் இவரும் அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தடம் மாறாமல் குடும்பமே அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் அப்படி இருந்து வரும் சூழ்நிலையில் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பில் கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
வங்கி தலைவர் ஆக உள்ளவர்களுக்கு வழக்கமாக வங்கியின் வாகனம்
டாட்டா சுமோ கார் வழங்கப்பட்டுள்ளது
இந்த வாகனத்தில் தலைவர் அவர்கள் காலையில் வங்கிக்கு வருவதும் அதன் பிறகு மேலூர் கூட்டுறவு வங்கியின் கிளை வங்கிகளுக்கு பணி நிமித்தமாக செல்வதற்கும் அதன் பிறகு மதியம் வங்கி தலைவர் தனது அலுவலக பணி முடிந்தவுடன் வீடு திரும்பும் போதும் இந்த வாகனத்தில் செல்வது வழக்கம் இதற்கு முன்பு மாற்று கட்சி வங்கி தலைவர்கள் இருந்த காலகட்டத்தில் இதே வாகனம் அவர்கள் இல்லத்தில் தான் இருந்தது அப்படி எல்லாம் இல்லாமல் பணிகளுக்கு மட்டுமே பயன் படுத்தி வந்த அதிமுக கட்சியை சார்ந்த வங்கி தலைவருக்கு வாகனம் திடீர்ரென ஒருவாரத்திற்கு முன்பு நிறுத்தியது ஏன்? என தூத்துக்குடியில் உள்ள அதிமுகவினர் மத்தியில் கேள்விகள் எழுந்து உள்ளது.
வங்கி தலைவர் மற்றும் அவரது கணவர் மற்றும் குடும்பம் அனைவரும் அதிமுக பாரம் பரியத்தை சார்ந்தவர்கள். நேர்மையான தலைவர் என்றும் அலுவலக பணிக்கு தவிர வாகனத்தை சொந்த உபோயோகத்திற்கு பயன்படுத்தாத தலைவர் என்ற பெயரை எடுத்த நிலையில் தற்போது கடந்த வெள்ளிகிழமை முதல் வங்கி தலைவர் அலுவலகத்திற்கு சென்று வரவும் மற்றும் கிளை வங்கிகளுக்கு செல்வதற்கு அலுவலக பணி நிமித்தமாக செல்வதற்கு வாகனம் மறுக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் அதிமுக வினர் மத்தியில் பரவி வருவதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
சில அரசியல் நெருக்கடி காரணமாகவா? அல்லது வேறு என்ன பிரச்சனை 1 வருடத்திற்கு மேல் வங்கி தலைவர் பணி நிமித்தத்திற்கு வழங்கப்பட்டு வந்த வாகனம் திடீரென நிறுத்தியதன் பின்னணி என்ன என்பது அனைவருக்கும் புரியாத புதிர் ஆக உள்ளது. இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் உடனே மேற்கண்ட வங்கியில் நடைபெறும் பிரச்சனை என்ன ? என்பது குறித்து விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது .அதிமுக கட்சியை சார்ந்த வங்கி தலைவருக்கு நடந்த இந்த அநீதிக்கு தீர்வு காண வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து உள்ளது . அதிமுக வை சார்ந்த பெண் வங்கி தலைவருக்கு அதிமுக ஆட்சி காலத்தில் இப்படி ஒரு நிலைமையா ? எனவும் இதற்கு பின்னணியில் யார்? யார் ? செயல்படுகிறார்கள் இதன் உள்நோக்கம் என்ன என்பது விசாரிக்க வேண்டும் எனவும் வங்கி உறுப்பினர்கள் மற்றும் பல அதிமுகவினர் அதிமுக தலைமைக்கு இதனை கொண்டு செல்கிறார்கள் இதன் பின்னணி என்ன? வங்கி சார்பில் ஏன் தலைவர் பணிக்கு இதுவரை கொடுக்கப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுந்துள்ளது. கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் இந்த துறையின் அரசு செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி விஷயத்தில் என்ன நடக்கிறது என? விசாரித்தால் உண்மை விளங்கும் என தூத்துக்குடியில் இருந்து அதிமுகவினர், வங்கி உறுப்பினர்கள் உட்பட பலரும் எதிர்பார்க்கின்றனர்
தூத்துக்குடியில் இருந்து போலீஸ் செய்தி டிவிக்காக
எம். ஆத்தி முத்து
அருண்
