• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இனி போக்குவரத்து விதியை மீறினால்‌‌‌ செல்போன் எண்களுக்கு செல்லான் வரும் திட்டம் அறிமுகம்

policeseithitv by policeseithitv
July 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இனி போக்குவரத்து விதியை மீறினால்‌‌‌ செல்போன் எண்களுக்கு செல்லான் வரும் திட்டம் அறிமுகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அண்ணாநகர் பகுதியில் 5 சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் போக்குவரத்து செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறையை துவக்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்ட்ட முக்கியமான சாலை சந்திப்புகளான அண்ணாநகர் ரவுண்டனா, 2. அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டனா, 3.சாந்தி காலனி சந்திப்பு, 4.100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, 5.மேற்கு டிப்போ மற்றும் 18வது சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் 2019ம் ஆண்டு, ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் ஓருங்கிணைந்து 61 நவீன கேமிராக்கள் நிறுவப்பட்டு, மேற்படி 5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டறையில் கண்காணித்து, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த செலான்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் National Informatics Centre (NIC) உடன் ஒருங்கிணைந்து, இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்கள் கேமிராக்களில் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் உடனுக்குடன் செலான்கள் அனுப்பும் முறைக்கான பணி செயல்படுத்தப்பட்டு, முடிவுற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று அண்ணாநகர் ரவுண்டனா அருகிலுள்ள போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்கும் அண்ணாநகர் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறையை திறந்து வைத்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு தானியங்கி செலான் அனுப்பும் புதிய நடைமுறையை துவக்கி வைத்தார்.
அதன்பேரில் இன்று (01.7.2021) முதல் மேற்படி 5 சிக்னல்களிலும், Signal violation, Stop line cross, Wrong way, Over speed
உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, தானியங்கி கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் மேற்படி வாகனங்களின் உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு தகவல் அளித்து, செலான் அனுப்பும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் பிரதிப்குமார், இ.கா.ப,. இணை ஆணையாளர்கள் ஆர்.லலிதா லஷ்மி, இ.கா.ப., (போக்குவரத்து/வடக்கு), எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப., (மேற்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் எஸ்.தீபா கனிக்கர், இ.கா.ப., (அண்ணாநகர் மாவட்டம்), எம்.எம்.அசோக் குமார் (போக்குவரத்து/மேற்கு), ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர்கள் ஸ்டீபன் சுதாகர், கணேஷ் மணி, கார்ப்பரேட் தலைமை விஜயபாஸ்கர், National Informatics Centre (NIC) நிர்வாக அதிகாரிகள் சீனிவாச ராகவன், ராமதாஸ், கதிர்செல்வன், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஶ்ரீதர் மற்றும் நிர்வாகிகள், காவல் அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

Previous Post

சென்னை காவல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்பு

Next Post
தாளமுத்துநகர்  பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In