தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் பீகார் புறப்பட்டது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்ப தூத்துக்குடியில் இருந்து இந்த வாரம் 3 சிறப்பு ரயில்களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த 8,700 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 1,919 பேர் உத்திரபிதேசம், பிஹார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 3 ரயில் மூலம் பஞ்சாப், உத்தரப் பிதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.
அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் இருந்து 913 தொழிலாளர்களுடன் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் நேற்று மாலைபுறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டது.
இதில் தூத்துக்குடியில் இருந்து 521பேர், நெல்லையில் இருந்து 206பேர், கன்னியாகுமரியில் இருந்து 186பேர் என மொத்தம் 913பேர் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி டவுண் டி. எஸ். பி பிரகாஷ் அவர்கள் மற்றும் வருவாய்த்துறை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்
செய்தி செய்தி எம் . ஆத்தி முத்து

