தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர். 1987ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்தார். குடியரசுத் தலைவர் பதக்கம், பிரதமர் விருது, வீரதீர செயலுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றவர். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கட்டுரைகளை எழுதும் தமிழகத்தின் புதிய டிஜிபி, இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

