விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இரவு வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின் பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை செய்தார்கள்.
அப்பொழுது விளாத்திகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்றங்கரை அருகில் உள்ள தொப்பம்பட்டி கிராமத்தின் ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வந்த தகவலின் பேரில் விளாத்திகுளம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் உத்தரவில் உட்கோட்ட தனிப்படையினர் சென்ற போது அங்கு வந்து கொண்டு இருந்த பதிவு எண் இல்லாத டிராக்ட்டரை நிறுத்திய போது வண்டியில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு ஓடி விட்டார்கள், வண்டியை சோதனை செய்த போது அதில் சட்ட விரோதமாக ஆற்று மணல் இருந்ததால் ஆற்று மணலுடன் வண்டியை விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள், பின்பு விசாரணை செய்து தப்பி ஓடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டது.
திறமையயாக பணிசெய்த உட்கோட்ட தனிப்படையினரை விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்

