• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்

policeseithitv by policeseithitv
June 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்
நாளை பதவியேற்கிறார்

தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபி (HOPF) திரிபாதி நாளையுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்த நிலையில் யூபிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகக் காவல்துறையில் உயரிய பதவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி. தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி முக்கியமானது. இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள்.

இந்தப் பதவிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரியைத் தமிழக அரசு நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு (யூபிஎஸ்சி) சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். இது உச்ச நீதிமன்ற உத்தரவு. அப்படித் தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்குக் கட்டாயம் பதவியில் இருப்பார்.

தற்போதைய சட்டம் ஒழுங்கு டிஜிபி நாளையுடன் ஓய்வு பெறுவதால் தற்போதுள்ள டிஜிபிக்களில் தகுதியுள்ள 7 பேர் பட்டியல் யூபிஎஸ்சி பார்வைக்குச் சென்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், தற்போதைய சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் டெல்லி சென்றனர்.

அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியலில் 7 அதிகாரிகள் பெயர் அனுப்பப்பட்டது. 1. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, 2. மத்திய அயல் பணியில் உள்ள சஞ்சய் அரோரா, 3. தீயணைப்புத் துறை டிஜிபி கரன் சின்ஹா, 4. சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங், 5. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, 6. சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், 7. டான்ஜெட்கோ டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி ஆகிய 7 பேர் ஆவர்.

இதில் சைலேந்திர பாபு, சஞ்சய் அரோரா, கரன் சின்ஹா ஆகியோர் பெயர் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதில் இறுதிப் பட்டியலில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா இருவர் பெயர் மட்டும் இருந்தது என்கிற தகவல் தலைமைச் செயலக வட்டாரத்தில் கசிந்தது. இந்நிலையில் இன்று மாலை புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிற நிலையில் தற்போது சைலேந்திர பாபுவை புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி, தற்போது ரயில்வே டிஜிபியாக பதவி வகிக்கிறார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி சட்டம், ஒழுங்குப்பிரிவிலும் அதிக அனுபவம் உள்ளவராவார். புதிய டிஜிபி நாளை பகல் 12 மணி அளவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

இவர் பல்வேறு விருதுகளை பெற்றவர் குறிப்பாககடமையுணர்வுக்கான இந்தியக் குடியரசுத்தலைவரின் விருது,
உயிர் காத்த செயலுக்கு இந்தியப் பிரதமரின் விருது,
வீரதீர செயலுக்கான தமிழக முதல்வரின் விருது ,
கடமை உணர்வுக்கான தமிழக முதல்வரின் விருது,
சிறப்பு அதிரடிப்படையில் வீரதீர செயலுக்கான தமிழக அரசின் விருது,
சிறப்பு பணிக்கான இந்தியக் குடியரசு தலைவரின் விருது ஆகியவற்றைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு ஆத்தி முத்து

Previous Post

தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் நாட்டுப்புறக்கலைஞர்கள் வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

Next Post

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிய நபர்களுக்கு வலைவீச்சு – டிராக்டர் பறிமுதல்

Next Post
விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிய நபர்களுக்கு வலைவீச்சு – டிராக்டர் பறிமுதல்

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிய நபர்களுக்கு வலைவீச்சு - டிராக்டர் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In