தூத்துக்குடி 2021 ஜூன் 30:தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் ;வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திலும் உள்ள ஆட்சியரிடம் தமிழன்டா இயக்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.தமிழ் பண்பாட்டை தூக்கி நிலைநிறுத்திட, தமிழர் பண்பாடுகளை காத்திட,தமிழை காத்திட,தமிழராக வாழ்ந்திட,பாரம்பரியத்தை பாதுகாத்திட,தமிழக நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாழ்வுக்காக ,நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அனைத்து கலைஞர்கள் கூட்டமைப்பான தமிழன்டா இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் மாநில தலைவர் ஜெகஜீவன் தலைமையில்,ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொருளாளர் பிரம்மராஜ் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடியில் மாநில செயலாளர் கதிர்வேல் தலைமையில் மேளதாளம் முழங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது தலைமை இயக்க பேச்சாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார், மாநில மகளிரணி தலைவி மாரியம்மாள், மாநில மகளிர் அணி துணை தலைவி ஜெயராணி போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

