விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு நேற்று தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்கள் .
விளாத்திகுளம் உட்கோட்டம் எட்டயாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. புருஷோத்தமன் மற்றும் முதல் நிலை காவலர் திரு.கோவில் பிள்ளை ஆகியோர் எட்டயாபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளில் கடந்த ஒரு வாரத்தில் 52 வழக்குகள் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுப்பதற்கும் நீதிமன்றத்தில் 16 வழக்குகளின் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தும் மெச்சதகுந்த பணிபுரிந்ததற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். பரிசு பெற்ற காவல் ஆளிநர்கள் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் பரிசு பெற்ற காவலர்களை பாராட்டினார்கள். மேலும் இனி வரும் காலங்களில் காவலர்கள் சிறப்பாக பணிபுரியவும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

