கொடைக்கானல் நகரில் 2008 ஆம் ஆண்டு தடையை நீக்கி 3300 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அடங்கலில் ஏற்றப்படாததால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர் இந்த நிலையில் கோட்டாட்சியர் அவர்களை சந்தித்தார் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் மக்களின் பிரச்சனையை எடுத்துக் கூறும் வகையில் கோரிக்கை மனு அளித்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வரும் திமுக நகர செயலாளர் இன்று கொடைக்கானல்கோட்டாட்சியர் முருகேசன் அவர்களிடம் கடந்த கழக ஆட்சியில் 2008ல் கொடைக்கானல் நகருக்கு தடையை நீக்கி 3300 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் 2000 மேல் வீட்டுமனை பட்டாக்கள் அடங்கலில் ஏறாமல் உள்ளது. ஆகையால் அனைத்து பட்டாக்களை அடங்கலில் ஏற்றுமாறு மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் விடுபட்ட வீட்டுமனை பட்டாக்களை உடனே வழங்க வேண்டும் என்றும் இன்று கொடைக்கானல் நகர கழகத்தின் சார்பாக கோட்டாட்சியரிடம் கொடைக்கானல் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹீம் தலைமையில் வலியுறுத்தப்பட்டது . அதற்கு கோட்டாட்சியர் அவர்கள் விரைவில் ஆவண செய்வதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது நகரச் செயலாளர் உடன் மரிய ஜெயந்தன் நகர அவைத்தலைவர், மாயக்கண்ணன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், செல்லத்துரை மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர், முகமது நயினார் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர், நகரத் துணைச் செயலாளர்கள் . சக்தி மோகன், . முனியாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் கொடைக்கானல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மிக அத்தியாவசியமான சான்றிதழ்கள் ஆகியவை தங்குதடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கப் பெற சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் கொடைக்கானல் திமுக நகர செயலாளர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார் கடந்த 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாக்கள் இடங்களில் ஏற்ற படாமல் இருந்து வந்தது குறித்து உடனடியாக அதனை சரிசெய்ய கோட்டாட்சியரிடம் அவர் தெரிவித்த விஷயம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுபோன்று பல்வேறு மக்கள் நல பணிகளை செய்துவரும் திமுக நகர செயலாளர் இப்ராஹிம் அவர்களே வருகிற உள்ளாட்சி தேர்தலில் கொடைக்கானல் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுப்போம் என உறுதி கூறுகின்றனர் கொடைக்கானல் மக்கள் அந்த அளவிற்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் கொடைக்கானல் மக்கள் திமுக நகர செயலாளர் மக்கள் பணி மென்மேலும் சிறக்க போலீஸ் செய்தி குழுமம் சார்பில் வாழ்த்துகிறோம்.
செய்தி தொகுப்பு போலீஸ் செய்தி நியூஸ் சேனலுக்கு காக கொடைக்கானல்
ஐ எஸ் மோகன்

