கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ்களில் மருத்துவ உதவியாளர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை உள்ளது.
கொடைக்கானல் நகரம், பூம்பாறை, மன்னவனூர், பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடியில் 108 ஆம்புலன்ஸ் இயக்கபடுகின்றன. ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணி முடித்து செல்லும் நிலையில் மாற்று பணிக்கு ஆட்களின்றி ஆம்புலன்ஸ் இயக்க முடியாத நிலை உள்ளது.சில வாரங்களாக நீடிக்கும் இந்நிலையால் அவசர உதவி கோரும் பொதுமக்களுக்கு அருகிலுள்ள ஆம்புலன்ஸ் சேவை வழங்க முடியாத சூழல் நிலவுகிறது.வேறு வழியின்றி தொலைவிலுள்ள ஆம்புலன்ஸ் வரவழைக்கப்படுவதால் நேர விரயமும், உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மக்களின் கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது.உயிர் காக்கும் சேவையில் உள்ள ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர்கள் நியமனம் அவசியம் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்கை ஏன் காட்டுகிறது என பொது மக்கள் புலம்பி வருகின்றனர் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டுமென மலைப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்துவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்
செய்தி வி ஆனந்த்

