கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அன்றாடம் பிழைப்பு நடத்திவரும் ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்திவரும் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா வழிகாட்டிகளாக இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு லாக்டவுன் காரணமாக வருமானமின்றி தவிப்பதை கருத்தில் கொண்டு பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டு ஏரிச்சாலை சன் கார்னரில் வைத்து சுற்றுலா வழிகாட்டி களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.உடன் சுற்றுலாவழிகாட்டிகளின் சங்க நிர்வாகிகள் ஐ எஸ் மோகன், L பிரபு, ஜெயசீலன் மற்றும் பலர் பங்கேற்றனர்
சுற்றுலா வழிகாட்டிகள் நிவாரணப் பொருள்களை பெற்று கொண்டு
விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகிகள் மற்றும் டிஎஸ்பி ஆத்மநாதன் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு போலீஸ் செய்தி நியூஸ் சேனலுக்கு கொடைக்கானல் ஐ எஸ் மோகன்



