சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு பெருந்தலைவர் பிர்லாகணேசன்,ஒன்றிய குழு துணைதலைவர் ராஜாத்தி நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கிராம ஊராட்சி அலுவலர்கள் சாந்தி, ஆகியோர் முன்னிலையில் இன்று கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு பெருந்தலைவர் பேசுகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அலுவலகம் இயங்கவில்லை.தற்போது புதிய அரசு அமைத்துள்ளது.சென்ற ஆண்டு நாம் எவ்வாறு பணி செய்தேமோ அதேபோல் இந்த வருடமும் நாம் அனைவரும் பணி செய்யவேண்டும் என கூட்டத்தில் பேசினார்.

கிராமநிதி,கொரோனா காலத்தில் அலுவகம் இயங்கவில்லை செலவு மட்டும் குறையவில்லை,தெண்ணிர்வயல் ஊராட்சி அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும், கொரோனா பணிக்கு கவுன்சிலர்க்கு id கார்டு ஏன் வழங்கவில்லை என பல்வேறு குறைகளை பற்றி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் பதில் கூறினார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

