கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக போக்குவரத்து வசதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தளர்வு ஏற்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு திண்டுக்கல் மதுரை பழனி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
கொடைக்கானல் முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன வெளியூர்களில் இருந்து பேருந்தில் கொடைக்கானல் வரும் அத்தனை பயணிகளும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகிலுள்ள நகராட்சி சுங்க சாவடியில் சுகாதாரத்துறையினர் கொரோணா பரிசோதனை ஸ்வாப் டெஸ்ட் செய்கின்றனர்
இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் காமக்காபட்டி காவல் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடைக்கானலுக்கு சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் செல்ல முடியாத நிலையும் அதே சமயத்தில் கொடைக்கானல் முகவரியுடன் இருப்பவர்கள் மட்டுமே அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிப்பது வேதனை அளிக்கிறது எனவும் இந்தத் தளர்வு பயனுள்ளதாக அமைய திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என கொடைக்கானல் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் கொடைக்கானல் ஆர்டிஓ நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத் துறையினர் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
போலீஸ் செய்தி நியூஸ் சேனல்க்காக கொடைக்கானல் ஐ எஸ் மோகன்

