கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய கூடுதல்
ஆணையாளர் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர
காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் மற்றும் 49 காவல் ஆளிநர்களுக்கு ( 2 உதவி ஆணையாளர்கள், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 31 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி நேற்று (01.5.2020) பணிக்கு திரும்பிய கூடுதல் காவல் ஆணையாளர் திருதினகரன், இ.கா.ப (வடக்கு அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்,மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று பணிக்கு திரும்பிய 49 காவல் ஆளிநர்களுக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் திரு அருண், இ.கா.ப (போக்குவரத்து) திரு.பிரேம் ஆனந்த சின்ஹா, சகாய, (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.சுதாகர்,
இ.கா.ப(கிழக்கு) திரு.கபில்குமார் சரத்கர்,
இ.கா.ப (வடக்கு) திருமதி மகேஷ்வரி (தெற்கு), திருமதி.விஜயகுமாரி, இ.கா.ப, (மேற்கு) திரு.ஏ. ஜி.பாபு இ.கா.ப(தலைமையிடம்), துணை
ஆணையாளர்கள் திருஆ. திருநாவுக்கரசு இ.கா.ப (நுண்ணறிப்பிரிவு), திருஎம்.சுதாகர்,
நுண்ணறிவுப்பிரிவு) திருமதி விமலா. தலைமையிடம் திரு. செந்தில்குமார் (நிர்வாகம்) திருமுத்துசாமி, இ.கா.ப (அண்ணாநகர்) திருபகலவன், இ.கா.ப (அடையார்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு தலைமைச்செயலக நிருபர்கள்
R.ஆனந்த்பாபு
M.R.ஜெய்பால்

