காவல்துறையினர்பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் ஆயுதப்படைகாவலர்களுக்கு ஆலோசனை வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில் வாகன சோதனை, வழக்கு விசாரணை போக்குவரத்தை சீர்படுத்தும் பணி உள்ளிட்ட நேரங்களில் பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார் மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் , காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாரூக் ஆகியோர் உடனிருந்தனர்

