• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2,500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் – 5 பேர் கைது

policeseithitv by policeseithitv
June 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2,500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் – 5 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் – 5 பேர் கைது – தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல் (பீச்) கடற்கரை வழியாக இலங்கைக்கு விரல் மஞ்சள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. ஆசைத்தம்பி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. கந்தசுப்பிரமணியன், தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார், முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி மற்றும் திரு. முத்தமிழ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (26.06.2021) அதிகாலை தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

♻️அப்போது 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள்கள் ஒரு வேனிலிருந்து படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ விரல் மஞ்சளின் இந்திய மதிப்பு ரூபாய் 3 லட்சமாகும். ஆனால் இவற்றின் இலங்கை மதிப்பு ருபாய் 16 லட்சம் வரையிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

♻️மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), சுனாமி காலணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19), கீழ வைப்பாரைச் சேர்ந்த அருள் மகன் ராபின்ஸ்டன் (23), அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் அருள் (55), ஜேசு மகன் விதுஸ்டன் (20) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

♻️மேற்படி கடத்தல் சம்பவம் தெர்மல் நகர் மெரைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பறிமுதல் செய்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றையும், கைது செய்த 5 பேரையும் மெரைன் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மெரைன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

♻️நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய படகு, வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட எதிரிகளையும் கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனின் மனித நேயம்

Next Post

திருவாடானை எம்எல்ஏ கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Next Post
திருவாடானை எம்எல்ஏ கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

திருவாடானை எம்எல்ஏ கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In