சீர்காழியை அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வந்த இவரும், இவரது மனைவி கார்த்திகாவும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். பெற்றோரை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகளை இன்று நேரில் சந்தித்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதே போல சீர்காழி செங்கமேடு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற முதியவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை செய்தார். அவருடன் மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங், சீர்காழி டிஎஸ்பி லா மேக், சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 

