அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேற்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார், காவல் நிலையம் அருகே பசுமை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்
இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும் வகையில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
ஆதரவற்ற முதியவர்களுக்கு பற்றிய தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள முதியவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு உணவு பொருட்களை வழங்கினார்கள். ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் அவர்கள், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

