திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலைய கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவி என்கின்ற ரவி குமார் மற்றும் மற்ற எதிரிகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோரின் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் பேரில் ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி .கே. செந்தில்குமார் தலைமையில் ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரபு , அருண்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் குமரேசன், அன்பரசு, பாலசுப்பிரமணியன், சத்தியமூர்த்தி ,பிரபாகரன் ஆகியோர்கள் திறம்பட பணியாற்றி எதிரிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூபாய் 1,65,00,000/- ஐ மீட்ட சிறப்பான பணியை திருச்சி சரக காவல்துறை டி.ஐ.ஜி ராதிக ஐ.பி.எஸ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

