கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் IPS மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோட்டார், வடசேரி, தக்கலை ஆகிய காவல் நிலையங்களுக்கு சென்ற அவர் காவல் நிலையங்களை சுற்றி பார்வையிட்டார். பின்பு காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் பேசிய அவர் காவல் துறையினர் காவல் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களிடம் அணுகும் போது கண்ணியமாகவும், பொறுமையாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், காவலர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

