கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப., துவங்கி வைக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ் முன்னிலையில் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று G.R.N. மருத்துவமனை டாக்டர். கோகுலரமணன் மேற்பார்வையில் இரண்டு மருத்துவக் குழுக்களின் உதவியுடன் கோவை மாவட்டக் காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினரின் குடும்பத்தினர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 400 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

