சென்னையில் 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்பு பணிக்காக சென்ற எஸ்ஐ சதீஷ்குமாருக்கும், அதே பகுதியில் உள்ள அருள்நகர் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வந்த பெண்ணிற்கு தகாத பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதலர்களாக மாறி கடந்த ஓராண்டாக தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வருகிறார்கள். ஒரு நாள் வழக்கம் போல் மணலி பகுதியில் அந்த பெண்ணின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்த போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் 15 வயது மகள் இந்த அசிங்கத்தை பார்த்துள்ளார்.
உடனே தனது அப்பாவிடம் இதை சொல்ல போவதாக தெரிவித்தார். இதனால் அச்சமடைந்த எஸ் ஐ சதீஷ்குமார், “உன் அப்பாவிடம் இதை கூறினால் நீயும் உன் தம்பியும் உயிரோடு இருக்க மாட்டீர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விஷயத்தை அந்த சிறுமி தனது தந்தையிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எஸ்ஐ தினந்தோறும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த 15 வயது சிறுமி மீது சதீஷ்குமாருக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதாக கூறி தனது ஆசையை சிறுமியின் தாயிடம் கூறினார்.
பணத்திற்கு ஆசைப்பட்டு வேலியாக இருக்க வேண்டிய தாயே சதீஷ்குமாரின் ஆசையை பூர்த்தி செய்ய தான் தடையாக இருக்க மாட்டேன் என கூறிவிட்டார். இந்த நிலையில் சிறுமியை சம்மதிக்க வைக்க அவரது பிறந்தநாளன்று கேக் வாங்கி வந்து கொடுத்துள்ளார். இதை சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து சிறுமியின் தந்தை மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

