திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 23 காவலர்களுடன் வாணியம்பாடி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகர், மாதகடப்பா ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 200 லிட்டர் கள்ளச்சாராயம், 1000 லிட்டர் சாராய ஊறல், சாராய வைத்திருந்த 25 பிளாஸ்டிக் கேன்கள், சாராயம் காய்ச்சிய 4 அடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது .
சட்ட விதிகளை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அதற்கு ஊறல்கள் போடுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் யாரெனும் ஈடுபட்டால் அந்த தகவலை அந்ததந்த நிலைய எல்லைக்குட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24×7 காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் 9442992526–ற்கு புகார் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

