அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினர்க்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் மகாலிங்கம் அவர்கள் 27.04.2021 அன்று புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார்.இந்நிலையில் இறப்பில் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய அவருடன் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக ரூபாய் 20 லட்சம் நிதி திரட்டினர். அந்தப் பணத்தை நிரந்தர வைப்பு தொகையாக காவலரின் குடும்பத்தினர் பெயரில் வங்கியில் போடப்பட்டது.
திரட்டப்பட்ட ரூ 20,00,000 நிதியின் நிரந்தர வைப்புத் தொகை ரசீது மற்றும் 7,500 ரூபாய் ரொக்கப் பணத்தையும் 23.06.2021 இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா காவலர் மகாலிங்கம் அவர்களின் பெற்றோர்கள் வரதராஜன் – தமயந்தி அவர்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்வின் போது அவருடன் பணியாற்றிய 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து காவலர்கள் உடனிருந்தனர்.

