சாலை பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக்கூட்டம் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் புதிய முயற்சி
தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் , நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்து அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு சாலை விபத்துகளை தடுக்கவும், அச்சாலைகளில் வேகத்தடை, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எச்சரிக்கை வசதிகள் செய்யவும் தேவையான ஆலோசனைக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தேசிய,மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,வட்டார போக்குவரத்து அலுவலர்(RTO),
மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்
திருவாரூர் மாவட்ட காவல்துறை சாலைபாதுகாப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையும் இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தி மாவட்டத்தில் சாலை விபத்துகளை படிப்படியாக குறைக்க
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

